என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பவுலர் ஜோசப்
நீங்கள் தேடியது "பவுலர் ஜோசப்"
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்தது கனவு போன்று உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் கூறினார். #IPL2019 #AlzarriJoseph
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 137 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 96 ரன்களில் சுருண்டது. ஐ.பி.எல்.-ல் ஐதராபாத் அணி 100 ரன்னுக்குள் முடங்குவது இதுவே முதல் நிகழ்வாகும்.
மும்பை வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 3.4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் வார்னர் (15 ரன்) கிளன் போல்டு ஆனதும் அடங்கும். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலரின் அற்புதமான பந்து வீச்சாக இது பதிவானது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு நடந்த முதலாவது ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சோகைல் தன்விர் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் எடுத்ததே (சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிராக) சிறந்த பந்து வீச்சாக இருந்தது. அந்த 11 ஆண்டு கால சாதனையை ஜோசப் முறியடித்தார்.
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 22 வயதான ஜோசப்புக்கு இது தான் முதல் ஐ.பி.எல். ஆட்டமாகும். மலிங்கா தாயகம் திரும்பியதால் களம் காணும் வாய்ப்பை பெற்ற ஜோசப் தனது அறிமுக ஆட்டத்திலேயே பிரமாதப்படுத்தி விட்டார்.
ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட அல்ஜாரி ஜோசப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல்.-ல் எனது முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட் வீழ்த்தியதை என்னால் நம்ப முடியவில்லை. கனவு போன்று உள்ளது. இதை விட பெரிதாக நான் எதையும் எதிர்பார்க்க முடியாது. நிச்சயம் இது மறக்க முடியாத நினைவாக இருக்கும்.
6 விக்கெட்டுகளில் எதை சிறந்ததாக கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, வெற்றியை உறுதி செய்த கடைசி விக்கெட் தான் என்று பதில் அளித்தார். ஜோசப்புக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘இன்னொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் எங்களை பெருமைப்படுத்தி விட்டார்’ என்று ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.

எனது திறமை மீது நம்பிக்கை வைத்து திட்டமிட்டு பந்து வீசினேன். அதற்குரிய பலன் தான் இது. வார்னரின் விக்கெட்டை வீழ்த்தியதும் ஏன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்று கேட்கிறீர்கள். எனது கவனம் எல்லாம் ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் தான் இருந்தது. உண்மையிலேயே நான் விக்கெட் வீழ்த்துவதை கொண்டாடுவதில்லை. வெற்றியைத் தான் கொண்டாடுகிறேன்.
எனது குறிக்கோள் விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்ல, அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும். வெற்றிக்காக மட்டுமே விளையாடுகிறேனே தவிர, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த கோப்பையை வெல்ல விரும்புகிறேன்’ என்றார்.
6 விக்கெட்டுகளில் எதை சிறந்ததாக கருதுகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, வெற்றியை உறுதி செய்த கடைசி விக்கெட் தான் என்று பதில் அளித்தார். ஜோசப்புக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ‘இன்னொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் எங்களை பெருமைப்படுத்தி விட்டார்’ என்று ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர்குமார் கூறுகையில், ‘நல்ல தொடக்கம் கிடைத்தும் (முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்தனர்) அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். மும்பை வீரர் பொல்லார்ட் ஆரம்பத்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை( 8 ரன்னில் தப்பியவர் பிறகு 4 சிக்சருடன் 46 ரன் எடுத்தார்) நழுவ விட்டது பின்னடைவாகி விட்டது. அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் இதை விட குறைந்த ஸ்கோரை சேசிங் செய்ய வேண்டியது வந்திருக்கும்.
இந்த ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. ஆடுகளம் ஈரப்பதத்துடன், வேகம் குறைந்து காணப்பட்டது. இத்தகைய ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல. ஆனாலும் 137 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான். நாங்கள் முழு திறமையை வெளிபடுத்தி நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்கி இருக்க வேண்டும். முதல் 3 ஓவர்களுக்கு பிறகு எங்களது பேட்டிங் சொதப்பி விட்டது’ என்றார். #IPL2019 #AlzarriJoseph
×

X